சனி, ஜூலை 02, 2011

தமிழ்ப் பண்பாட்டின் கூறுகள் (Posted in wiki pedia)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழர் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டிலும் நாகரிகத்திலும்
சிறந்திருந்தனர் என்பதை சங்க இலக்கியங்கள் உணர்த்துகின்றன. மொழிக்கு இலக்கணம்
வகுத்த தமிழர்கள் மனித வாழ்வியலுக்கும் இலக்கணம் வகுத்து வாழ்ந்தனர். தமிழர்
வாழ்வை அகவாழ்வு, புறவாழ்வு என இரண்டாக இலக்கணம் வகுத்து வாழ்ந்தமை
பண்பாட்டின் சிகரமாகக் கருதப்படுகிறது. .தான் தோன்றிய கால மக்களின் நாகரிகம்,
பண்பாடு, பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, அரசு, அமைச்சுர், ஆட்சிமுறை, போர், வீரம்,
காதல் போன்றவற்றை நமக்குக் காட்டி நிற்கின்றன. நமக்குக் கிடைத்திருக்கும் சங்க
இலக்கியங்களிலிருந்து தமிழர் பண்பாட்டை நன்கு அறிகிறோம். பண்பாட்டின் கூறுகள்
சிலவற்றைப் பற்றி இங்கு காண்போம்.

காதல்:
========

தமிழர் காதலை அன்பின் ஐந்திணை என்றனர். இஃது ஒருவனும் ஒருத்தியும் கொண்ட

உளமொத்தத் தூயகாதல் வாழ்க்கையாகும். இது களவு, கற்பு என இரண்டாக அமையும்.

ஐந்திணை ஒழுக்கத்தில் தலைமக்களாக விளங்குபவர்கள். அறிவும், செல்வமும் உடைய

நல்லகுலத்தில் பிறந்தவர்கள். இக்காதல் நாடகத்தில் தலைவன், தலைவி நற்றாய்,

செவிலித்தாய், தோழி, பாணன், பாடினி போன்றோரும் ஊர் மக்களும் பாத்திரங்களாக வருவர்.

இக்காதல் வாழ்வு அறத்திலிருந்து மாறுபடாமல் அன்பின் வழிப்பாட்டாக அமையும்.

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்நன்கலம் நன்மக்கட் பேறு

என்று வள்ளுவரும் காதல்வழிவந்த மனை மாட்சியைச் சிறப்பிக்கின்றார்

வீரம்:
=======

பண்டைய தமிழர்கள் வீரத்தைத் தொல்காப்பியப் புறத்திணை இயல் எடுத்துக் கூறுகின்றது.

பெரும்பாலும் தற்காப்பு முறையில் தான் போர் நடைபெற்றது. தேர்ப்படை, யானைப்படை,

குதிரைப்படை, காலாட்படை என்ற நால்வகைப் படைகளும் போரில் ஈடுபட்டன. வெட்சி,

வஞ்சி, உழிகை, தும்பை என்ற நான்கு புறத்திணை பகுதிகளிலும் தமிழர்களின்

போர்முறைகள் தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன. மேலும் வீரர் அல்லாதவர்கள்,

புறங்காட்ட ஓடுவார், புண்பட்டார், முதியோர், இளையோர், இவர்கள் மீது படைக்கலம்

செலுத்தலாகாது என்பதும் புறநானூற்றால் அறிய முடிகிறது.

நட்பு:
======

சங்ககாலத் தமிழர் நட்பினை பெரிதும் மதித்து வாழ்ந்தனர். திருவள்ளுவரும் உண்மையான

நட்புக்கு இலக்கணம் கூறியுள்ளார்.

முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு

உள்ளன்புடன் மனம் மகிழ்ந்து நட்பு கொள்வதே உண்மையான நட்பாகுமென்றார்.

விருந்தோம்பல்:
===================

அல்லாதவராய் புதியராக நம்மிடம் வரும் மக்களை ‘விருந்து’ என்றனர் தமிழர்.

அறியாதவர்களையும் அழைத்து உணவளித்து இடமளித்து உபசரித்து மகிழ்ந்தனர் தமிழர்.

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு'
” என்கிறார் திருவள்ளுவர். விருந்தினர்களை வெளியில் இருக்கச் செய்து தான் மட்டும்

வீட்டின் உள்ளே உண்ணுதல் சாவாமைக்கு மருந்தாகிய அமிர்தமாக இருந்தாலும்

வேண்டப்படுவதில்லை என்பதை வள்ளுவர்,

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

” என்று கூறுவதிலிருந்து விருந்தோம்பல் சங்க கால மக்களின் பண்பாக இருந்தமை அறிய

முடிகிறது.

இவை மட்டுமன்றி ஈகை,கொடை,கற்புடைமை,உலக ஒருமைப்பாடு ஆகியவற்றையும்

தமிழ்ப் பண்பாட்டின் கூறுகலாக கொள்ளலாம்.


'விருந்து’ என்ற சொல்லுக்குப் ‘புதுமை’ என்பது பொருள். உறவினரும் நண்பரும். "எனக்கு படிக்க படிக்க ஆர்வம் அதிகரித்து கொண்டுதான் போகிறது" 


அகத்திணை வாயில்கள்
============================
 அகவொழுக்கம் உள்ளத்தில் பதிந்துகிடக்கும் ஒழுக்ககம். பிறருக்குப் புலப்படுத்த முடியாத 

உடலுறவு பற்றியது. இது தலைவன்-தலைவி உறவாக அமையின் போற்றப்படும், அதுவும்

திருமணத்துக்கு முன் இருக்கும்போது தூற்றப்படும். தூற்றுதலை அலர் என்பர். தலைவன்-

பரத்தை உறவு பழிக்கப்படும்.


இந்த உறவுகள் தலைவன்-தலைவி மாட்டு அமையத் தூது செல்வோரை வாயில்கள்

என்பர். இந்த வாயில்கள் யார் யார் எனத் தொல்காப்பியர் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.

(கற்பியல் 52)
1.தோழி, 2.தாய், 3.பார்ப்பான், 4.பாங்கன், 5.பாணன், 6.பாடினி, 7.இளையர், 8.விருந்தினர், 9.கூத்தர்,

10.விறலியர், 11.அறிவர், 12.கண்டோர்

என்னும் 12 பேர் வாயில்கள். இவர்களை வீட்டுக்குள் நுழைய இடம் தரும் வாயிலோடு

ஒப்பிட்டு உணர்நுகொள்வது நல்லது.

ஆவுதி
=======
ஆவுதி என்னும் சொல் யாகத்தைக் குறிக்கும். ஆவின் பாலில் உதித்த நெய்யை

வழங்குவது ஆவுதி. பதிற்றுப்பத்து நூலின் மூன்றாம்பத்துத் தலைவன் பல்யானைச்

செல்கெழு குட்டுவன் இரண்டு வகையான ஆவுதிகள் செய்தான் என்று அப்பத்தில்

அவனைப் பாடிய பார்ப்பனப் புலவர் பாலைக்கௌதமனார் குறிப்பிடுகிறார்.

பெரும்பெயர் ஆவுதி
======================
'உருகெழு மரபின் கடவுட் பேணியர், கொண்ட தீயின் சுடர் எழுதோறும், விரும்பு நெய் பரந்த

பெரும்பெயர் ஆவுதி'

அச்சம் தரும் கடவுளைப் பேணுவதற்காகத் தீ வளர்த்து அதில் நெய்யை ஊற்றுவது

பெரும்பெயர் ஆவுதி.


அடுநெய் ஆவுதி
==================

'வருநர் வரையார் வார வேண்டி, விருந்து கண்மாறாது உணீஇயப் பாசவர் ஊனத்து அழித்த

வால் நிணக் கொழுங்குறை குய் இடுதோறும் ஆனாது ஆர்ப்பக் கடல் ஒலி கொண்டு

செழுநகர் வரைப்பின் நடுவண் எழுந்த அடுநெய் ஆவுதி'

அடுநெய் ஆவுதியில் நெய் சோற்றில் ஊற்றப்படும். நெழுநகர் வரைப்பு என்னும் பெருமனை

மடத்தில் இந்த ஆவுதியைப் பாசவர் என்னும் சமையல்காரர் செய்வார். அங்கு யார்

வரலாம் யார் வரக்கூடாது என்னும் வரையறை இல்லை. விருந்துணவு யாராயிருந்தாலும்

வேறுபாடு இல்லாமல் வழங்கப்படும். இவ்வாறு வழங்குவதற்கு அடுநெய் ஆவுதி என்று

பெயர். இதனை இக்காலத்தில் அன்னதானம் என்பர்.

தணத்தல்
==========
தணத்தல் என்பது சஙக இலக்கியத்தில் தலைவனும் தலைவியும் பிரிந்திருத்தல். இதனை

'ஒருவழித் தணத்தல்' என்பர். இந்தப் பிரிவுக்குக் காரணம் இல்லை. தற்செயலாக நிகழும்.

காலமும் இல்லை. (மணத்தல் என்பது தலைவனும் தலைவியும் கூடியிருத்தல்).

மூவேந்தர் குடிப் பூ
=====================
சேர, சோழ, பாண்டியர் என்னும் தொகைச்சொல் மூவேந்தரைக் குறிக்கும். இவர்கள் தம்

குடியின் அடையாளச் சின்னமாக வெவ்வேறு பூக்களை அணிந்தனர். இதனைக் குடிப் பூ

என்றும் அடையாளப் பூ என்றும் சொல்லலாம்

  • சேரர் - பனைமடலால் செய்த பூ
  • சோழர் - ஆர் (ஆத்தி)
  • பாண்டியர் - வேம்பு
தொல்காப்பியம்
-----------------------------


புறத்திணையில் வெட்சித்திணையின் துறைகளைக் கூறும்போது தொல்காப்பியர் மூவேந்தரின் குடிப்பூ பற்றிக் குறிப்பிடுகிறார். 'போந்தை வேம்பே ஆர் என வரூஉம் மா பெருந் தானையர் மலைந்த பூ'-ப்போர் ஒரு துறை என்கிறார். (தொல்காப்பியம் 1006)


புறநானூறு
----------------------
'வேம்பும் ஆரும் மோந்தையும் மூன்றும் மலைந்த சென்னியர் அணிந்த வில்லர் கொற்ற வேந்தர்' என்று மூவேந்தரின் குடிப்பூக்கள் அடுக்கிக் காட்டப்பட்டுள்ளன.

புறநானூறு
----------------------
புலவர் கோவூர் கிழார் நலங்கிள்ளிக்கும், நெடுங்கிள்ளிக்கும் அறிவுரை கூறும்போது 'நீங்கள் இருவரும் ஆர் (=ஆத்திப் பூ) சூடியவர்கள். பனைமரத்தினை வெண்தோடும், வேம்பும் அணிந்தவர் (முறையே சேரரும், பாண்டியரும்) அல்லர் என்று குறிப்பிடுகிறார்.


விளரிப்பண்

============
பிரிவை உணர்த்தும் பாலைப்பண்ணை விளரிப்பண் என்றும் கூறுவர். உலகை விட்டுப்

பிரிந்த பெருமக்கள் மேல் இந்தப் பண் பாடப்படும். இக்காலத்தில் சாவுமேளம்

கொட்டிக்கொண்டு இறந்தவரின் புகழைப் பாடுவர். இது ஆண்கள் பாடும் விளரிப்பண்.

மகளிர் இறந்தவரின் புகழைப் பாடிக்கொண்டு வைக்கும் ஒப்பாரியும் விளரிப்பண்ணே.

நெடுங்கழுத்துப் பரணர் என்னும் புலவர் துடி முழக்கத்துடன் விளரிப்பண் பாடப்பட்டதைத்

தம் பாடலில் (புறநானூறு 291) குறிப்பிட்டுள்ளார்.


வெறியாட்டு
=============
வெறியாட்டு என்பது சங்க கால வீட்டுவிழா.

தலைவியைத் துய்த்த தலைவன் தலைவியிட்ம் வராமல் 'ஒருவழித் தணந்து' நிற்பதும்,

தலைவி தலைவனை எண்ணி உடல் இளைப்பதும், இந்த இளைப்புக்கான காரணத்தை

அவளது தாய் வேலனையோ, குறிசொல்லும் முதுவாய்ப் பெண்டையோ கேட்டறிவதும்,

அவர்கள் முருகன் அணங்கினான் என்பதும், வெறியாட்டு அயர முருகன் சினம் தணிந்து

மகள் நலம் பெறுவாள் என்பதும், தாய் மகளுக்கு வெறியாட்டு விழா நடத்துவதும்

வெறியாட்டு எனப்படும். இதனை முருகயர்தல் என்றும் கூறுவர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

5 Minutes to write comment it will make me to add more contents to the site..