திங்கள், ஜூலை 11, 2011

எண் ஒலிப்பு

எண் ஒலிப்புஒன்றிற்குக் கீழான அளவுள்ள எண்களும் அதற்குரிய ஒலிப்புச் சொற்களும் கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

எண் அளவு சொல்
1/320              320 ல் ஒரு பங்கு முந்திரி
1/160              160 ல் ஒரு பங்கு அரைக்காணி
3/320              320 ல் மூன்று பங்கு அரைக்காணி முந்திரி
1/80               80 ல் ஒரு பங்கு காணி
1/64               64  ல் ஒரு பங்கு கால் வீசம்
1/40               40 ல் ஒரு பங்கு அரைமா
1/32               32 ல் ஒரு பங்கு அரை வீசம்
3/80               80 ல் மூன்று பங்கு முக்காணி
3/64               64 ல் மூன்று பங்கு முக்கால் வீசம்
1/20               20 ஒரு பங்கு ஒருமா
1/16               16 ல் ஒரு பங்கு மாகாணி (வீசம்)
1/10               10 ல் ஒரு பங்கு இருமா
1/8                8 ல் ஒரு பங்கு அரைக்கால்
3/20               20 ல் மூன்று பங்கு மூன்றுமா
3/16               16 ல் மூன்று பங்கு மூன்று வீசம்
1/5                ஐந்தில் ஒரு பங்கு நாலுமா
1/4                நான்கில் ஒரு பங்கு கால்
1/2                இரண்டில் ஒரு பங்கு அரை
3/4                நான்கில் மூன்று பங்கு முக்கால்
1                  ஒன்று ஒன்று


எண் ஒலிப்பு ஒன்றிலிருந்து பிரமகற்பம் எனும் முக்கோடி வரை இருக்கும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.
எண் ஒலிப்புச் சொல்
1                                                        ஒன்று (ஏகம்)

10                                                      பத்து
100                                                    நூறு
1000                                                  ஆயிரம்(சகசிரம்)
10,000                                               பதினாயிரம்(ஆயுதம்)
1,00,000                                            நூறாயிரம்(லட்சம் - நியுதம்)
10,00,000                                         பத்து நூறாயிரம்
1,00,00,000                                     கோடி
10,00,00,000                                  அற்புதம்
1,00,00,00,000                               நிகற்புதம்
10,00,00,00,000                             கும்பம்
1,00,00,00,00,000                          கணம்
10,00,00,00,00,000                       கற்பம்
1,00,00,00,00,00,000                    நிகற்பம்
10,00,00,00,00,00,000                  பதுமம்
1,00,00,00,00,00,00,000                சங்கம்
10,00,00,00,00,00,00,000               வெள்ளம்(சமுத்திரம்)
1,00,00,00,00,00,00,00,000            அந்நியம்
10,00,00,00,00,00,00,00,000           (அர்த்தம்)
1,00,00,00,00,00,00,00,00,000         பரார்த்தம்
10,00,00,00,00,00,00,00,00,000        பூரியம்
1,00,00,00,00,00,00,00,00,00,000      பிரமகற்பம் (கோடிக்கோடி-முக்கோடி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

5 Minutes to write comment it will make me to add more contents to the site..