புதன், ஜூன் 29, 2011

எத்தனை முகங்கள் அடா வீதியிலே-மந்திர புன்னகை படத்திலிருந்து..


சித்தன்  முகம்  ஒன்று , பித்தன்  முகம்  ஒன்று

புத்தன்  முகம்  ஒன்று , எத்தன்  முகம்  ஒன்று
 
சுப்பன்  முகம்  ஒன்று , குப்பன்  முகம்  ஒன்று

அப்பன்  முகம்  ஒன்று , அம்மை  முகம்  ஒன்று

எத்தனை  முகங்கள்  வீதியிலே

உன்   முகம்  போலே  வேறு  இல்லே

எத்தனை  முகங்கள்  வீதியிலே

உன்  முகம்  போலே  வேறு  இல்லே 
*******************************************
 திசைகளை  திறக்கும்  பெறலின்  முகம்தான்

தோல்வியை  ரசிக்கும்  முயற்சியின்  முகம்  தான்

வெற்றியே  சிரிக்கும்  வீரத்தின்  முகம்  தான்

கடன்களை  பதிக்கும்  சாதனை  முகம்தான்

கண்ணாடி  போலே  முகம்  ஒன்று

உண்மை  தன்னை  காட்டும்

அங்காடி  போல்  உன்  முகம்  என்றும்

கண்ணால்  தூண்டில்  நீட்டும்

கொட்டிக்கிடக்குது  கோடி  முகங்கள்

சட்டென  பட்டது  தேடி  எடுங்கள்  தேடி  எடுங்கள்

எத்தனை  முகங்கள்  வீதியிலே

உன்  முகம்  போலே  வேறு  இல்லே
****************************************************
அடங்கிட  மறுக்கும்  ஆசையின்  முகம்தான்

தொடங்கிட  துடிக்கும்  நம்பிக்கை  முகம்தான்

நடப்பது  எல்லாம்  நாடக  முகம்தான்

கிடைப்பதே  என்றும்  கேள்வியின்  முகம்தான்

மண்  மேலே  தோன்றும்  முகம்  எல்லாம்

அன்பை  தேடும்  நாளும்

அன்பாலே  ஆனா  முகம்  என்றும்

உன்னை  என்னை  ஆளும்

கொட்டிக்கிடக்குது  கோடி  முகங்கள்

சட்டேனப்பட்டதை  தேடி  எடுங்கள்

தேடி  எடுங்கள்  தேடி  எடுங்கள்

****************************எத்தனை முகங்கள் அடா வீதியிலே ************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

5 Minutes to write comment it will make me to add more contents to the site..